தேனி அருகே உள்ள கும்பக்கரை அருவியில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5-வது நாளாக பொதுமக்கள், அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக தடை நீடிப்பதால், அருவிக்கு நீராட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
























