வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 500 மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.
பேரணாம்பட்டை அடுத்த அரவட்லா என்ற இடத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அவர்களிடம் 500 கர்நாடக மாநில மதுபானப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தீபன் ராஜ், வசந்தராஜ், நாகராஜ் என 3 பேரை கைது செய்தனர்.

























