அதிமுக முன்னாள் எம்எல் சின்னசாமி, அதிமுகவில் இருந்து விலகி, சென்னையில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அப்போது, திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். 2006 மற்றும் 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சிங்காநல்லூர் தொகுதியில், சின்னசாமி வெற்றி பெற்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சின்னசாமி, அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பதால், திமுகவில் இணைந்ததாக குறிப்பிட்டார்.

























