மதுரையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரை, டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி, 60 லட்சம் ரூபாய் பணம் பறித்த கும்பலை, போலீஸாரை கைது செய்திருக்கின்றனர்.
மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரை, சில நாட்களுக்கு முன்னர் ஒரு கும்பல், தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளது. அப்போது, மறுமுனையில் பேசிய நபர், தம்மை போலீஸ் என அறிமுகம் செய்துள்ளார்.
உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து, சட்டவிரோதமாக பணம் பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறி மிரட்டிய அவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் வங்கி கணக்கில் இருந்து, 60 லட்சம் ரூபாய் பணத்தை, அபகரித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், மோசடிக் கும்பலை சேர்ந்த 6 பேரை, போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இதுபோன்ற மோசடிக் கும்பலிடம் இருந்து, விழிப்புடன் இருக்க வேண்டும் என, காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

























