தேர்தல் வெற்றி குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்ததற்காக நன்றி என்று கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றி, மக்களுக்கு சேவை செய்வதற்கு புதிய பலத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் ஆதரவு மனநிலை வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது. என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் காலங்களில், பீகாரின் முன்னேற்றம், பீகாரின் உள்கட்டமைப்பு மற்றும் பீகாரின் கலாச்சாரத்திற்காக நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்வோம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


























