தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே கரையை கடந்து நிலப்பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது.தொடர்ந்து தமிழ்நாட்டின் ஊடே தென்மேற்கு திசையில் நகர்ந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் விட்டு விட்டு கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

























