திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இரண்டு காவலர்களின் மண்டையும் உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் பி.ஜே.பி. உள்ளிட்ட ஏராளமான இந்து அமைப்பினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். ஆனால் தடுப்புகளை தகர்த்தி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றதால் இரு தரப்பினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் தாக்கியதில் ஒரு காவலரின் மண்டை உடைந்தது. மொத்தம் 2 காவலர்கள் காயம் அடைந்தனர். இரண்டு காவலர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

























