பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்து, தேர்தல் ஆணையம் மோசடியாக அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும், இதைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று கூறினார். அன்புமணியின் தலைவர் பதவி என்பது கடந்த மே மாதம் 28-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனால், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, தனது பதவிக் காலம் இருப்பதாக, போலியாக ஒரு கடிதத்தை அன்புமணி தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளார். இது மோசடியானது, இதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருக்கிறது என்று கூறினார்.

























