சென்னையை அடுத்து திருப்போரூரில், விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில், தற்போது கருப்பு பெட்டி மீட்கப்பட்டிருக்கிறது.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து, பயிற்சி விமானம் நேற்று புறப்பட்டது. சுபம் என்ற விமானி, இந்த விமானத்தை இயக்கினார். பிற்பகல் 2-00 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், திருப்போரூரில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே கீழே விழுந்தது.
விமானம் கீழே விழப்போவதை அறிந்த விமானி, முன்னதாக பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். விமானம் விழுந்த இடத்தில், தொழிற்சாலையின் ஒரு பகுதி சேதமானது. தகவல் அறிந்து, திருப்போரூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த விமானி, பரங்கிமலை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

























