சென்னை மந்தவெளி ரயில் நிலையம் அருகே ரவுடி ஒருவரை எதிர்தரப்பினர் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்தவர் மௌலி. இவர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை மௌலியை பின் தொடர்ந்து வந்த எதிர்தரப்பை சேர்ந்த ஒரு கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
சாலையில் ரத்த காயங்களுடன் கிடந்த மௌலியை அங்கிருந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மௌலி பரிதாபமாக உயிரிழந்தார்.
























