சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர்கள் செயல்பட வேண்டும், மசோதாக்கள் மீது நீண்ட காலம் முடிவு எடுக்காமல் தாமதம் செய்தால், மாநில அரசுகள் நீதிமன்றத்தை நாடலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே முழு அதிகாரம் கொண்டவை, இரு அதிகார மையங்கள் இருக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.ஆளுநர்கள், உரிய காரணமின்றி மசோதாக்களை நீண்டகாலம் நிறுத்திவைப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்ற நீதிபதிகள், மசோதா பற்றி கேள்வி எழுந்தால், அரசுடன் கலந்துபேசி தீர்வுகாண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தான் முழு அதிகாரம் கொண்டவை அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், இரு அதிகார அமைப்புகள் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு முரணாக, அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின்படி நீதிமன்றங்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்ப¤ட்டுள்ளனர். தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
























