அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நியூயார்க் நகர மேயரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நாளை அதிபரை சந்திக்க உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளி நியூயார்க் நகரின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றார். இவர் அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தார். அதர்கு பதிலடியாக, மம்தானியை 100 சதவீத கம்யூனிஸ்டு பைத்தியம் என்று விமர்சித்து வந்த டிரம்ப், அவர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்திவிடுவேன் என மிரட்டல் வ¤டுத்துவந்தார்.
இந்நிலையில், மேயர் மம்தானி, நாளை வெள்ளை மாளிகையில் தம்மை சந்திக்க உள்ளதாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


























