ஈரோட்டில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வரும் 18ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் விஜய் பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தை ஆய்வு செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வந்தார். அவரை தவெக உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், விஜய் வருவதற்கு ஒரு வழியும், பொதுமக்கள் வந்து செல்ல 7 தனி வழிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
























