2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ள சசிகலா, நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் இணைந்து சசிகலா இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் குறித்து ஆக்கப் பூர்வமான கருத்துகளை கூறாமல், பெயர் மாற்றம் குறித்து மட்டுமே, திமுக பேசி வருவதாக விமர்சித்தார்.
அதிமுக-பிஜேபி இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோது, இதுபற்றி பேசுவதற்கு எதுவுமில்லை என அவர் பதில் அளித்தார். கடந்த முறை சிலர் செய்த தவறினால் திமுக ஆட்சிக்கு வந்த தாகவும், இந்த முறை நான் ஒதுங்கியிருக்க மாட்டேன் என்றும் சசிகலா கூறினார்.

























