திருப்பரங்குன்றம் மலை மீது தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, ஊர்மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் தங்கள் கடைகளில் அகல் விளக்கு ஏற்றி வைத்தனர்.
பொதுமக்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். 50 பேர் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. Ðபலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தியும் இன்று திருப்பரங்குன்றம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள 150 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது கடைகளில் அகல் விளக்குகள் ஏற்றி வைத்தனர்.

























