காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக உள்நோக்கத்துடன் கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேசை சிறையில் அடைக்க, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்.பி- டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவற்றை விசாரித்த உயர்நீதிமன்றம், டி.எஸ்.பி., சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது. இதுகுறித்து நீதிபதி மீதான புகார் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கவும் உத்தரவிட்டது. அது வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி செம்மலை பணி இடைநீக்கம் செய்து உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி செம்மல், தற்போது அரியலூர் மாவட்ட லோக் அதாலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

























