மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில், தூண்டில் வளைவையும் தாண்டி தண்ணீர் விழுவதால், அங்கு பொது மக்கள் 2-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், அருவிக்கு குளிக்க வந்த பலர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்கிரோஷமாக பாய்ந்து செல்கிறது. அருவியை சுற்றியுள்ள பகுதிகளை தண்ணீர் மூழ்கடித்து செல்வதால், பாதுகாப்பு கருதி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அருவிக்கு குளிக்க வந்த பலர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

























