மார்த்தாண்டம் அருகே டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ மதில் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இருந்து களியல் நோக்கி சென்று கொண்டிருந்த மினி டெம்போ டயர் வெடித்து மதில் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போவை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

























