திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் பரிதாபாமாக உயிரிழந்தற்கு அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை,தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை என திமுக ஆட்சியில் தொடர் கொலை சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருவதாகவும் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் ஸ்டாலின் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறும் முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

























