கிராமப்புற ஏழைகளின் நலன்களை புறக்கணித்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பலவீனப்படுத்த மத்திய மோடி அரசு முயற்சித்து வருவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக. விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சோனியா காந்தி, கிராமப்புறங்களில் உள்ள ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் நலன்களைப் புறக்கணிக்கும் செயல்களை, கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.
இந்த சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம், மோடி அரசாங்கம் கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளின் நலன்களைத் தாக்கியுள்ளதாக கூறியுள்ள சோனியா காந்தி, இதனை எதிர்கொள்ள தயாராவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

























