அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க விரும்பும் பிஜேபி-யின் திட்டம் கேள்விக்குறியானது.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து டெல்லி சென்றுள்ள அவர், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துப் பேசியுள்ளார். அவருடன், தமிழக பிஜேபி மேலிட பொருப்பாளர் அரவிந்த் மேனனும் உடனிருந்தார். இதனிடையே, திங்கள்கிழமை தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியிருந்த ஓ.பன்னீர்செல்வமும், அதனை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். இதனால், பிரிந்தவர்களை மீண்டும் அதிமுக-விலோ அல்லது தங்களது கூட்டணியிலோ இணைப்பது தொடர்பாகவே, தமிழக பிஜேபி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
























