எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என, அம முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயல லிதாவின் 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் டிடிவி தினகரன் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது தலைமையில் அமமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மதத்தை வைத்து தமிழகத்தில் எந்த கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்த நிலையில், தான் நேரில் சென்று சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவரும் அழைக்க மாட்டார் என்று கூறினார்.
























