வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தும் தொடர்பாக நடுமுழுவதிலும் இருந்து ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் குவிந்துள்ளன, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக, இனி எந்த மனுவையும் ஏற்க வேண்டாம் என்று பதிவாளருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி, விளம்பரம் தேடுவதற்காக எஸ்.ஐ.ஆர் குறித்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்வது வருத்தம் அளிக்கிறது என்றார். மற்ற வழக்குகளின் விசாரணைக்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் வழக்கறிஞர்கள் தங்களின் வாய்மொழி வாதத்தை முன்வைத்த பின்னர், தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் என்றும்,
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களின் சார்பிலான வழக்கை வரும் 17-ம் தேதிக்கு பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அசாம் மாநில வழக்கு வரும் 16-ம் தேதியும், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் வரும் 18-ம் தேதியும் பட்டியலிடப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், எஸ்ஐஆர் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வெளியாக ஜனவரி மாதமாகிவிடும் எனத் தெரிகிறது.

























