செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து, த.வெ.க-வில் இணைந்திருப்பது பற்றி கருத்து கூற முடியாது என்றும், பிஜேபி-க்கு எந்த ஸ்லீப்பர் செல்லும் கிடையாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க வெற்றிபெறும் என்று செங்கோட்டையன் சொல்வது, அவர் அந்தக் கட்சியின் இணைந்திருப்பதால், தலைமையை திருப்திப் படுத்துவதற்காக இருக்கலாம் என்றார்.
அதிமுக-பிஜேபி கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வருவதற்கான வாய்ப்புள்ளதாகவும், திமுக மீதான மக்களின் வெறுப்பு காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஆனால், அவர் இப்போது திமுக-வில் இணைந்து விட்டாரோ என்ற சந்தேகம் வருவதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

























