மின்சாரம், உணவு, இணைய வசதிகள் எதுவும் இன்றி பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டிட்வா புயல் இலங்கையில் கடும் சேதத்தை விளைவித்துள்ளது, ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் சிக்கித் தவித்த தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்கலை சந்தித்த அவர்கள் அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.

























