பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியதால், பயணிகள் 23 பேர் காயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து, பெரம்பலூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் என்ற இடத்தருகே வந்தபோது, மறுமார்க்கத்தில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறம் சென்று, ஆம்னி பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

























