ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்றும், பொங்கலுக்கு பிறகு தமிழக அரசியலில் திருப்புமுனையை காணலாம் என்றும், தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இதனை தெரிவித்த அவர், அதிமுகவில் இருந்து சிலர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவார்கள் என உறுதியாக பதிலளித்தார். மேலும், பாரதிய ஜனதா கட்சியை கொள்கை ரீதியாக தமிழக வெற்றிக்கழகம் எதிர்க்கிறது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை காணலாம் என்றும், நல்ல முடிவுகள் வெளிவரும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
























