தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 11.9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. எனினும், நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் குலுங்கி, தரையில் விழுந்து கிடந்தன. இதனால் மக்கள் கடும் அச்சத்தின் உள்ளனர்.


























