7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நிர்வாக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடர்வதாக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் எனவும், தேர்வு பணிகளை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






















