சென்னையில் குடிமனை பட்டா இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், இந்த பிரச்சினை தொடர்பாக இன்று முதலமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், குழு அமைத்து இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.

























