நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தை மாற்றியமைத்திருப்பது, மாநிலங்கள் மீதும், நாட்டின் வளர்ச்சி மீதும், ஏழை தொழிலாளர்கள் மீதும் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலங்களின் நிதியையும், முடிவெடுக்கும் அதிகாரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும், ஏழை தொழிலாளர்களின் வருமானத்தையும், பிரதமர் அழித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இதனிடையே, மகாத்மா காந்தி பெயரிலான நூறுநாள் வேலைத் திட்டத்தை மாற்றியதை கண்டித்து, வரும் ஜனவரி 5-ம் தேதி முதல், நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்படும் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
























