வாக்குத் திருட்டு குறித்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விவாதம் நடத்த தயாரா என்று, மக்களவையில் அமித்ஷாவுக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்தார்.
மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம், எஸ்ஐஆர் குறித்து அமித்ஷா பேசும்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேரடி விவாதம் நடத்துவதே சரியான தீர்வு, அதற்கு தயாரா எனக் கேட்டார்.
முன்னதாக சோனியா காந்தியும்,இந்திரா காந்தியும் தான் முதன்முதலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டார்கள் என்று கூறியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
























