செங்கோட்டையன் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டு, துரோகம் செய்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக, எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும், எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, உரையாற்றிய அவர் அதிமுக ஆட்சிக் காலத்தில், கொங்கு மண்டலத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.எந்த கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
























