ஜுனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாக நடந்த லீக் போட்டி முடிவடைந்துள்ளன. கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் மதுரை போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்காக சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூர் அருகே, கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்றது.
மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் தவிர பொதுமக்கள் யாரும் போட்டியை கண்டுகளிக்க அனுமதிக்கப்படவில்லை. வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பச்சைக்கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கிவைத்தார்.
வாடிவாசல் வழியாக 105 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. துள்ளி குதித்து வந்த காளைகளை 50 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு தழுவினர்.அப்போது காளைகள் முட்டியதில் 13 வீரர்கள் காயமடைந்தனர்.
தமிழர்களின் வீர விளையாட்டடை ஹாக்கி வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.























