தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிஜேபியின் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் இன்று சென்னையில் உள்ள கட்சி அலுவலத்த¤ல், பிஜேபி மையக்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில், தேர்தல் இணை பொறுப்பாளர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் சோஹல், தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிஜேபி போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இன்றைய சந்திப்பின்போது, 170 தொகுதிகளுக்கும் குறையால் அதிமுக போட்டியிட விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிஜேபிக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையே வழங்கப்படும் என அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், ஒற்றை இலக்கத்தில் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக் கூறியதாகவும் தெரிகிறது. அதேசமயம், அன்புமணி தலைமையிலான பாமக, பிரேமலதாவின் தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை வழங்க முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி அடுத்தகட்ட ஆலோசனையின்போது முடிவு செய்யப்படும் எனவும் பிஜேபி வட்டாரங்கள் கூறுகின்றன.

























