கேரள மாநிலம் கொல்லம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பள்ளி வாகனம் உட்பட 3 வாகனங்கள் சிக்கின.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் 6 வழிப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசர்கோடு அருகே இந்தச் சாலையின் பக்கசுவர் இடிந்து விழுந்ததால் சாலையின் தரம் குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது கொல்லத்தை அடுத்த கொட்டியம் சந்திப்பில் உள்ள இணைப்பு சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்தது. இதில் தனியார் பள்ளி வாகனம் உட்பட 3 வாகனங்கள் சிக்கின. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சாலை வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்

























