சென்னையை அடுத்த திருப்போரூரில் 611 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்காவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனம், 611 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பொழுதுபோக்குப் பூங்காவை அமைத்துள்ளது. இந்தப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருப்போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
























