தென்காசி அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் மாற்றுத் திறனாளி மகளுக்கு, அரசுப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் துரைசாமிபுரத்தில், 2 நாட்களுக்கு முன்பு இரண்டு பேருந்துகள் மோதிய கோர விபத்தில், புளியங்குடியை சேர்ந்த மல்லிகா உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மல்லிகாவின் பராமரிப்பில் இருந்த அவரின் மாற்றுத் திறனாளி மகள் கீர்த்திகா, பெற்றோரை இழந்த தனக்கு இனி யாருமே இல்லை எனவும், எம்.ஏ. பி.எட் படித்த தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, கீர்த்திகாவை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து, உரிய உதவிகளை செய்வார் என உறுதி அளித்தார். அதன்படி கீர்த்திகாவை அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்த ஆட்சியர் கமல் கிஷோர், புளியங்குடி நகராட்சியில், டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை வழங்கினார்.

























