இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து போய், அதிமுகவை அமித்ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள் எனப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி சொல்வது போல, சிறப்பான ஆட்சி என்றால், 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவை மக்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகளிர் விடியல் பேருந்தில் பெண்கள் பயணிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் லிப்ஸ்டிக் பஸ் என, பெண்களை அவமதிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, இன்று பெண்களின் நலத்திட்டங்களுக்காக குரல் கொடுத்தேன் என நாடகமாடி உள்ளதாகவும் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணி வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால், வரும் தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும் என எடப்பாடி பழனிசாமி அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார். பிஜேபியோடு கூட்டு சேர்ந்து அதிமுக நின்றிருந்தாலும் திமுக கூட்டணியை வென்றிருக்க முடியாது என்றும் ரகுபதி கூறியுள்ளார்.

























