திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, பக்தர்கள் மலையேற தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 3 ஆம் தேதி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலின் பின்புறம் உள்ள, 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை காண வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இதனிடையே, கடந்த ஆண்டு மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மகா தீபத்தன்று மலையேற மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதனையும் மீறி மலையேறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

























