கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கன்னியாகுமாரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தபப்ட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டையம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல், பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் தமிழகத்தில் பரவுவதை தடுக்கும் வகையில், மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, தமிழக பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து எல்லைக நுழைவு வாயில் பகுதிகளில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், மற்றும் பாரம் இறக்கிவிட்டு திரும்ப வரும் வாகனங்கள் தமிழக- கேரளா எல்லையான படந்தாலு மூடு சோதனை சாவடியில், கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

























