சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஹாங்காங்கில் சமீபத்தில் வரலாறு காணாத அளவுக்கு எற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 75 ஆண்டுகளில் இல்லாத அழிவை அந்நகரம் சந்தித்து இருந்தது. இந்த நிலையில்
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாந்தவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அனைத்து குடியிருப்புகளுக்கும் பரவியது. இதனால் குடியிருப்பு வாசிகள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர், எனினும் இந்த கோர விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


























