8 மணிநேரம் வேலை, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் ரயில் ஓட்டுனர்கள், 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
ரயில்வேயில் பணியாற்றக்கூடிய ரயில் என்ஜின் ஓட்டுனர்களுக்கு, 8 மணிநேரம் வேலை, 46 மணி நேரத்துடன் கூடிய வார விடுமுறை, வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தொடர் இரவுப்பணி வழங்கிட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அகில இந்திய ரயில் என்ஜின் டிரைவர்கள் நலச்சங்கம் சார்பில், நாடுதழுவிய அளவில் 2 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில், ரயில்வே பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

























