இஸ்ரேல் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், ஜெய்சங்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து தொழில்நுட்பம், பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில், உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தியதாக கூறி இருக்கிறார்.
இஸ்ரேல்-இந்தியா இடையிலான நல்லுறவு, இன்னும் பலப்படும் என்ற நம்பிக்கை, தமக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும், ஜெய்சங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


























