நிர்வாக வசதிகளுக்காக, த.வெ.க-வின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 120-ல் இருந்து 128 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை மேற்கொள்ள, கட்சியானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி, 120 மாவட்டங்களாக ஏற்கெனவே பிரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் நிர்வாக வசதிகளுக்காகக் கட்சியின் மாவட்டங்கள் எண்ணிக்கை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் பிரிக்கப்பட்டு, தற்போது 8 மாவட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறியுள்ளார். புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ள அவர், புதிய நிர்வாகிகளுக்குக் கட்சித் தொண்டர்கள் அவைரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
























