அமமுக தருமபுரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய டி.டி.வி.தினகரன், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை சீர்குலைக்க கடவுள், ஜாதி, மதம் பெயரால் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற ஜனவரி 5-ல் சென்னையில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறினார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தான் தகுதிநீக்க தீர்மான நோட்டீஸ் கொடுப்பார்கள் என்றும், திமுக கூட்டணி கொடுத்துள்ள மனு வித்தியாசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வருகிற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. எங்களை தொடர்பு கொள்கிறவர்களின் அணுகுமுறையை பொறுத்து முடிவெடுப்போம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

























