வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை காணொலி மூலம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.























