பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேசிய வேளாண்மை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நபார்டு வங்கியின் சார்பில் கூட்டுறவு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் முறையாக கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சேர்க்கப்படாததால், அதை சரிசெய்யும் பணிகள் நடைபெறுகிறது. இவை முடிந்தவுடன் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்றும் பெரியகருப்பன் கூறினார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்தார்.

























