துபாய் விமான கண்காட்சியின்போது, தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் நமன்ஷ் சியால் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலன், அவருக்கு தமிழ்நாடு அஞ்சலி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘விங் கமாண்டர்’ நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்-
நமன்ஷ் சியாலின் உடல் கோவைக்கு கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு தாம் கலங்கியதாகவும், சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
























