நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரண்டாம் நாளான இன்று அவைத்தலைவர் ஓம் பிர்லா அவையை நடத்த முற்பட்டார். அப்போது INDIA கூட்டணி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் SIR குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது எஸ்.ஐ.ஆர், தொழிலாளர் சீரமைப்புச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் அவைக்கு வெளியில் வந்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சோனியா, ராகுல், காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே மற்றும் திமுகவின் எம் பிக்கள் ஈடுபட்டனர்.
அவைக்கு வெளியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் MP திரு. மாணிக்கம் தாகுர் SIR குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவேண்டும் என்றும், புதிய தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் தேவை என்றும் மத்திய அரசை வலியுறுத்தினார்.

























